/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் இரு இடங்களில் 2 பேர் சடலமாக மீட்பு
/
வடலுாரில் இரு இடங்களில் 2 பேர் சடலமாக மீட்பு
ADDED : நவ 18, 2025 07:39 AM
வடலுார்: வடலுாரில் வெவ்வேறு இடங்களில் சடலமாக மீட்கப்பட்ட இருவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வடலுார் சபை, பெருவெளியில் உள்ள மரம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துாக்கில் சடலமாக தொங்குவதாக வடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, இறந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரிய வந்தது. இறந்த நபர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரம் தெரியவில்லை. சம்பவம் குறித்து பார்வதிபுரம் வி.ஏ.ஒ., சக்திகுமார் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து இறந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும், வடலுார் பஸ் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் கிடப்பதாக வடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டனர். இறந்தவர் வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர். சேராக்குப்பம் வி.ஏ.ஓ., ஜெயமூர்த்தி புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

