தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

மதுபாட்டில் கடத்திய இருவர் கைது


ADDED : நவ 23, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி: பைக்கில் மதுபாட்டில் கடத்திய, இருவரை போலீசார் கைது செய்தனர்.

குறிஞ்சிப்பாடி சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று மதியம், அண்ணா நகர் சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஸ்கூட்டரில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் திரும்பி செல்ல முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார,் அவர்களை பிடித்து சோதனை செய்ததில், கட்டைப்பையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.

விசாரணையில், இருவரும் குறிஞ்சிப்பாடி, பெரிய கண்ணாடி கோபாலகிருஷ்ணன்,63; அண்ணா நகர் சங்கர்,53; என்பதும் தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தி வந்த 25 மது பாட்டில்கள்,ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us