UPDATED : அக் 07, 2026 12:07 AM
ADDED : அக் 06, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
வடலூர்: மின் கம்பியை திருடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்
வடலூர் அடுத்த மேல கொளக்குடி, ஈசா பெரிய ஏரிக்கரை அருகே சில நாட்களுக்கு முன் புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது. நேற்று மதியம் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்த கம்பத்தில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள, 400 மீ., அலுமினிய ஒயர்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
