ADDED : நவ 06, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர், தேரடிக்குப்பத்தை சேர்ந்தவர் தணிகாசலம், 44. இவர் நேற்று முன்தினம் வெள்ளைக்கரை - புலியூர்காட்டுசாகை சாலையில் பைக்கில் கிருஷ்ணமூர்த்தி, 72, என்பவருடன் சென்றார்.
எதிரே வந்த ஸ்கூட்டர், பைக் மீது மோதியது. படுகாயமடைந்த தணிகாசலம், கிருஷ்ணமூர்த்தி கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.