ADDED : நவ 04, 2026 02:32 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி அருகே கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது, மேலப்பாளையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பின்புறம் உள்ள புளியந்தோப்பில் சந்தேகிக்கும் வகையில் க நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அசோக்,21, பாண்டியன் மகன் யோகேஷ்,27, என்பதும், அவர்களிடம் 16 கிராம் கஞ்சா இருந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
