ADDED : ஜூலை 25, 2025 02:43 AM
விருத்தாசலம்: தனித்தனியே நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.
விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 63; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில், கொடுக்கூரில் இருந்து, விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம், சுப்ரமணியன் பைக் மீது மோதியது. இதில், அவர் படுகாயமடைந்தார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்,52; நேற்று முன்தினம் பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து சிறுவரப்பூர் சென்றார். சிறுவரப்பூர் பஸ் நிறுத்தம் அருகே செ ன்ற போது, பின்னால் வந்த கார் மோதியதில் கமலக்கண்ணன் இறந்தார். புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.