ADDED : டிச 16, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி; குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் குமாரசாமி மகன், சிந்துகரன், 28, அந்தோணி மகன், ரக்சன், 28, இருவரும் நேற்று முன்தினம் குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் பைக்கில் சென்றனர்.
பள்ளிநீரோடை பகுதியில் சென்றபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் மோதியது. விபத்தில் சிந்துகரன், ரக்சன் இருவரும் படுகாயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.