தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு

 பஸ் நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு

 பஸ் நிறுத்தத்தில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமிப்பு


ADDED : ஏப் 27, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 10:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் வாகன ஒட்டிகள் ஆக்கிரமிப்பதால் பஸ்கள் நிறுத்த இடமின்றி செல்வதால் பயணியர்கள் கடும் சிரமம்படுகின்றனர்.

கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம், கடைவீதியில் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் கடலுார்,விருத்தாசலம், சிதம்பரம், திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் நின்று பயணிகளை ஏற்றி, இறங்கிவிட்டு செல்லும். பஸ் நிறுத்தம் அருகே வங்கிகள், ேஹாட்டல்கள் மற்றும் கடைகளுக்கு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோக்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி கொள்வதால் பஸ் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்த இடமின்றி சற்று துாரம் சென்று பயணிகளை இறங்கி விடவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் பல மணிநேரம் பஸ் நிறுத்தத்தில் காத்து இருக்கும் பயணிகள் பேருந்து நிற்காமால் செல்வதால் தங்களது பயணங்களை குறித்த நேரத்திற்கு மேற்கொள்ள முடியமால் தவிக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us