/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகர தி.மு.க., சார்பில் உதயநிதி பிறந்தநாள்
/
நகர தி.மு.க., சார்பில் உதயநிதி பிறந்தநாள்
ADDED : நவ 29, 2024 04:44 AM

பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க.சார்பில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
மேற்கு மாவட்ட அவைத் தலைவர் நந்தேகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நான்குமுனை சந்திப்பில் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
பின் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் , தாய்மார்களுக்கு பிரட், ரஸ்க், பிஸ்கட், பழங்கள் வழங்கினர்.
அம்மா அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி சரவணன், துணை சேர்மன் சிவா, அவைத் தலைவர் ராஜா, துணை செயலாளர் கவுரிஅன்பழகன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பரணி சந்தர், மாவட்ட பிரதிநிதி சரவணன், பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், பாலச்சந்தர் பார்த்திபன் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

