/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியில்லாத குவாரி; நடவடிக்கை எடுக்க இன்ஸ்.., தயக்கம்
/
அனுமதியில்லாத குவாரி; நடவடிக்கை எடுக்க இன்ஸ்.., தயக்கம்
அனுமதியில்லாத குவாரி; நடவடிக்கை எடுக்க இன்ஸ்.., தயக்கம்
அனுமதியில்லாத குவாரி; நடவடிக்கை எடுக்க இன்ஸ்.., தயக்கம்
ADDED : அக் 08, 2025 12:12 AM
கடலுார் மாவட்ட கடற்கரையோர போலீஸ் ஸ்டேஷனுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர், கடந்த லோக்சபா தேர்தலின் போது, பணிக்கு வந்தார். இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட எல்லையில் சவுடு மணல் குவாரிகள் அதிகளவில் இயங்கியதால், ஒவ்வொரு மாதமும் போாலீசாருக்கு கணிசமான தொகை கிடைத்தது.
இதனால், இங்கேயே பணியில் இருக்க இன்ஸ்பெக்டருக்கு பிடித்து போய்விட்டது. தேர்தல் பணி முடிந்து, வெளி மாவட்டங்களில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் சொந்த மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றனர்.
ஆனால், பெண் இன்ஸ்பெக்டர் மட்டும் இங்கேயே செட்டிலாகிவிட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன் பெரியகுமட்டி சம்பந்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி சவுடு மணல் குவாரி இயங்கியது. குவாரி நடத்தியவர்கள் மீது இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த தகவல் எஸ்.பி., யின் கவனத்திற்கு தெரியவர சிதம்பரம் உட்கோட்ட கிரைம் டீமை சம்மந்தப்பட்ட குவாரிக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது, குவாரியில் மணல் ஏற்ற வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து, 2 பேரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
ஆனால், மணல் திருட்டுக்கு தொடர்பில்லாத நபர் மீது வழக்குப் பதிந்து, மற்றொரு நபரை இன்ஸ்பெக்டர் அனுப்பி விட்டார். சவுடு மணல் குவாரிக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் செயல்படுவதாக சக போலீசார் புலம்பி வருகின்றனர்.
சவுடு மணல் குவாரியில் அதிக ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தும் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.