/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டணி கட்சிகள் நெருக்கடி; தி.மு.க.,வினர் 'அப்செட்'
/
கூட்டணி கட்சிகள் நெருக்கடி; தி.மு.க.,வினர் 'அப்செட்'
கூட்டணி கட்சிகள் நெருக்கடி; தி.மு.க.,வினர் 'அப்செட்'
கூட்டணி கட்சிகள் நெருக்கடி; தி.மு.க.,வினர் 'அப்செட்'
ADDED : அக் 08, 2025 12:13 AM
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், கடந்த 1996 தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் குழந்தை தமிழரசன் வெற்றி பெற்றார். அதன்பின், அக்கட்சி உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,வாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த 2021 தேர்தலில் உதயநிதி, மாவட்ட செயலாளர் கணேசன் ஆதரவு பெற்ற நபர்களில் யாருக்கேனும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்., கைப்பற்றியது.
இப்படி 1996 முதல் சொந்தக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் யாருமே இல்லையே என ஏங்கிய தி.மு.க.,வினர், இம்முறை தலைமையிடம் முறையிட்டு வாய்ப்பை பெறுவோம். 2026 தேர்தலில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும், மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி வாகை சூடுவோம் என 'சிண்டிகேட்' போட்டு காத்திருந்தனர்.
ஆனால், நெய்வேலி தொகுதியை பூர்வீகமாக கொண்ட சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், விருத்தாசலம் பெரியார் நகரில் சொந்தமாக 1 கோடி ரூபாய்க்கு வீட்டை வாங்கினார். தற்போது, நானும் உள்ளூர்காரனாகி விட்டேன்; மீண்டும் நானே போட்டியிட போகிறேன் என அறைகூவல் விடுத்து வருகிறார்.
இதற்கிடையே, தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என எதிர்பார்க்கப்படுவதால் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகள் கட்டாயம் பறிபோகும் என்பதால், தி.மு.க.,வினர் கலக்கமடைந்தனர்.
இவ்வாறு, காங்., - தே.மு.தி.க.,வால் சலிப்படைந்த தி.மு.க.,வினருக்கு மேலும் ஒரு அதிரடி உருவானது. சமீபத்தில், விருத்தாசலத்திற்கு வந்த த.வா.க., நிறுவன தலைவர் வேல்முருகன், 'தான் வெற்றி பெற்ற பண்ருட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவது இல்லை' என்று தடாலடியாக அறிவித்தார். இதனால் அவர், விருத்தாசலத்தில் போட்டியிடுவார் என அக்கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1996 முதல் 2026ல் கனவு பலிக்கும்' என காத்திருந்த நிலையில் காங்., - தே.மு.தி.க., - த.வா.க., என கூட்டணி கட்சிகள் வரிசை கட்டி நெருக்கடி தர காத்திருப்பதால் தி.முக., நிர்வாகிகள், முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.