/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காத்திருப்போர் கூடம் : எம்.எல்.ஏ., அடிக்கல்
/
காத்திருப்போர் கூடம் : எம்.எல்.ஏ., அடிக்கல்
ADDED : அக் 08, 2025 12:13 AM

கிள்ளை; கிள்ளை அருகே புதிய காத்திருப்போர் கூடத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.
கிள்ளை அடுத்த தில்லை விடங்கன் ஊராட்சியில், சிதம்பரம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய காத்திருப்போர் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது.
பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசிங்காரவேலு முன்னிலை வகித்தனர்.
பாண்டியன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் நம்பியப்பன், பரமானந்தம், ராஜாராமன், காளிமுத்து, சிவக்குமார், மாயவன் உட்பட பலர் பங்கேற்றனர்.