ADDED : மார் 22, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் நத்தவெளி ரோடு-சரவணா நகர் இணைப்பு சாலை வளைவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டிருந்த அடைப்பு 'தினமலர்' செய்தி எதிரொலியால் சரி செய்யப்பட்டது.
கடலுார் நத்தவெளி ரோடு-சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இந்த சாலை வளைவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் வழியாக கழிவுநீர் வழிந்தோடி சாலையில் தேங்கி நின்றது. இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டதுடன், தொற்றுநோய் ஏற்படும் அவலமும் ஏற்பட்டது.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, பாதாள சாக்கடை அடைப்பை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர்.