ADDED : மார் 31, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று பகல் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர் காவி நிற சட்டை மற்றும் காவி நிற வேஷ்டி அணிந்திருந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.