ADDED : ஆக 21, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, ஆக. 22–
திட்டக்குடியில் அடையாளம் தெரியாத முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 3ம்தேதி 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடந்தார். அவரை, திட்டக்குடி போலீசார் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 19ம் தேதி இறந்தார்.
இதுகுறித்து, திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
