ADDED : பிப் 23, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே நேற்று காலை 70 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார்.
அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. வேட்டி மட்டும் அணிந்திருந்தார்.
இதுகுறித்து, பு.முட்லுார் வி.ஏ.ஓ., சேதுமாணிக்கம் கொடுத்த தகவலின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.