ADDED : ஜூலை 14, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுார் ரயில்வே கேட் அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
வடலுார் ரயில்வே கேட் அருகில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் வடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் சடலத்தை மீட்டனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.