ADDED : ஜூன் 04, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள பயணியர் நிழற்குடையில், அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கதக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து, அரியகோஷ்டி வி.ஏ.ஓ., அளித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.