UPDATED : அக் 20, 2026 08:05 PM
ADDED : அக் 20, 2026 08:02 PM

அ நிறம் | அளவு
கடலுார்: ஆயுத பூஜையையொட்டி கடலுார் முதுநகர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள அய்யன் திருவள்ளுவர் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகளுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
காங்., மாநில செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு சீருடை வழங்கினார். இதில் வழக்கறிஞர் கலையரசன், ராமராஜ், இளைஞர் காங்., அருள்பிரகாஷ், தர்மதுரை, ராஜேஷ், ஆறுமுகம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆட்டோ சங்க நிர்வாகிகள் சக்திவேல் செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் வெங்கசேடன், பாண்டுரங்கன் மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
