/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒன்றிய பொறியாளர்கள் புவனகிரியில் போராட்டம்
/
ஒன்றிய பொறியாளர்கள் புவனகிரியில் போராட்டம்
ADDED : டிச 11, 2024 04:35 AM
புவனகிரி : கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நாகப்பட்டினம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் ரமேஷ் இருவரை தனித்தனி சம்பவத்தில் ஒப்பந்ததார்கள் தாக்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊராட்சி ஒன்றிய பணியாற்றும் பொறியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், புவனகிரியில் நேற்று ஊரக வளர்ச்சி பொறியாளர்கள் ஒரு நாள் கருப்பு பேஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் பொறியாளர்கள் ஆதரவு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.