/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பளம் வழங்க கோரி பல்கலை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
/
சம்பளம் வழங்க கோரி பல்கலை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சம்பளம் வழங்க கோரி பல்கலை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சம்பளம் வழங்க கோரி பல்கலை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
ADDED : ஜூன் 04, 2025 09:42 PM

சிதம்பரம்; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சம்ளம் வழங்காததை கண்டித்து, நிர்வாக அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, கடந்த 2013 ல் பல்கலைகழகத்தை அரசு ஏற்றது. அதனை தொடர்ந்து பல்கலையில் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளுக்கு, பணி நிரவல் மூலம் இட மாற்றம் செய்தனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கே அரசு தவித்து வருகிறது. பல மாதங்கள் தாமதமாக சம்பளம் போடப்பட்டுள்ளது. இம்மாதம், மே மாத சம்பளம் இதுவரை போடப்படவில்லை. மே மாதம் முடிந்து, 4 ம் தேதி ஆன நிலையிலும், நேற்று வரை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்படவில்லை. பள்ளி திறப்பு நேரம் என்பதால், ஊழியர்கள் வங்கி கடன் மற்றும் பள்ளி கட்டணம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை சுமார் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உடனடியாக சம்பளம் வழங்க கோரி பல்கலைகழக நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்கலைகழக கன்வினர் அருட்செல்வி நடத்தி பேச்சு வார்த்தையில், அரசுக்கு தகவல் தெரிவித்து நாளைக்குள் நல்ல முடிவு சொல்வதாக தெரிவித்ததை தொடர்ந்து ஊழியர்கள் கலைந்து சென்றனர். இன்று சம்பளம் வரவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஊழியர் சங்க தலைவர் மனோகரன் தெரிவித்தார்.