/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி பள்ளியில் ஆளில்லா நேர்மை அங்காடி நிகழ்ச்சி
/
நகராட்சி பள்ளியில் ஆளில்லா நேர்மை அங்காடி நிகழ்ச்சி
நகராட்சி பள்ளியில் ஆளில்லா நேர்மை அங்காடி நிகழ்ச்சி
நகராட்சி பள்ளியில் ஆளில்லா நேர்மை அங்காடி நிகழ்ச்சி
ADDED : அக் 30, 2025 07:29 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் புதுப்பேட்டை நகராட்சி நடுநிலை பள்ளியில், எலைட் ரோட்டரி சங்கம் சார்பில், ஆளில்லா நேர்மை அங்காடி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தலைவர் ராஜா ஜூவல்லரி உரிமையாளர் குமார் தலைமை தாங்கினார்.
செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.பொருளாளர் குருசாமி வரவேற்றார்.
துணை ஆளுநர் அசோக்குமார் பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, பொருட்களின் மீது உள்ள விலைப் பட்டியலை பார்த்து, அதற்கான பணத்தினை அருகில் இருக்கும் பெட்டியில் போட்டு விட்டு மாணவர்கள் சென்றனர்.
மாணவர்களிடம் நேர்மையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடந்தது.முடிவில் தலைமை ஆசிரியர் விசாலாட்சி நன்றி கூறினார்.

