ADDED : பிப் 24, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பெயிண்ட் அடித்த போது மின்சாரம் தாக்கி இறந்த உத்தரபிரதேச நபர் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த கொள்ளுக்காரன்குட்டை வாட்டர் டேங்க் எதிரே புதிதாக டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழாவிற்கான பணிகள் நடந்து வருகிறது.
இதில், உத்தரபிரதேச மாநிலம், கோரக்ப்பூர் மாவட்டம், சாரிசாரு தாலுக்கா சேர்ந்த சேஷநாத், 44; என்பவர் கடந்த 20 நாட்களாக வேலை செய்து வந்தார். நேற்று காலை 11:30 மணிக்கு ஷோரூம் உள்பகுதியில் பெயிண்ட் அடித்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே இறந்தார். அவரது உடல் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
