/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்
/
கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்
கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்
கல்லுாரி விளையாட்டு மைதானம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : நவ 27, 2025 04:48 AM

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கல்லுாரியில் பராமரிப்பின்றி கிடக்கும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திட்டக்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இங்குள்ள, மாணவ, மாணவியரின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில், விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.
அதில், மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெளியூர்களுக்கு செல்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தன.
தற்போது, விளையாட்டு மைதானம் முறையாக பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் அதிகளவில் மண்டியுள்ளன.
இதனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் மாணவ, மாணவியர் தவிக்கின்றனர்.
மேலும், கல்லுாரி அளவிலும், மாவட்டம், மாநில அளவிலும் போட்டிகளை நடத்த முடியாத சூழலும் தொடர்கிறது.
எனவே, திட்டக்குடி அரசு கல்லுாரியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க, உயர்கல்வித் துறையினர் நடவடிக்கை எடுக்க, மாணவ, மாணவியர் வலியுறுத்தி உள்ளனர்.

