/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியிடங்கள் காலி பணிகள் பாதிப்பு
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியிடங்கள் காலி பணிகள் பாதிப்பு
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியிடங்கள் காலி பணிகள் பாதிப்பு
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியிடங்கள் காலி பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 15, 2025 12:40 AM
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டட ஆய்வளாராக பணியாற்றியவர் பண்ருட்டி நகராட்சிக்கு 2 ஆண்டுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதில் புதிய கட்டட ஆய்வாளர் நியமிக்கப்படவில்லை. இதனால், கட்டட அனுமதி பெறாமல் பலர் கட்டடங்களை கட்டி வருவதால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இங்கு பணியாற்றிய ஒரே ஒரு துப்புரவு ஆய்வாளரும் 8 மாதங்களுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை.
விிருத்தாசலம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் கூடுதலாக பணியாற்றுகிறார். கட்டட ஆய்வாளரும், துப்புரவு ஆய்வாளரும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வருகிறார்கள்.அதுவும் அவர்கள் நிரந்தரமாக பணியாற்றும் இடத்தில் வேலை இருந்தால் வருவதில்லை. துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால் நகராட்சியில் நடைபெறும் துப்புரவு பணிகளை கண்காணிக்க முடியாததோடு பிறப்பு இறப்பு சான்றுகள் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.
காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.

