/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் ரயில்வே கேட் இன்று மூடல் வி.கே.டி., சாலையில் போக்குவரத்து மாற்றம்

ADDED : ஜன 31, 2024 07:34 AM
வடலுார் : பராமரிப்பு பணி காரணமாக வடலுார் ரயில்வே கேட் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது.
விருத்தாசலம்- கடலுார் ரயில் பாதையில் சென்னை- கும்பகோணம் நெடுஞ்சாலையில் வடலுார் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக இன்று 31ம் தேதி காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை மூடப்படுகிறது.
இதனால், கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் வடலுார், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, கொள்ளுகாரன்குட்டை வழியாக பண்ருட்டி செல்ல வேண்டும். பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் கொள்ளுகாரன்குட்டையில் இடது புறமாக திரும்பி குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, வடலுார் வழியாக செல்ல வேண்டும்.
பண்ருட்டியில் இருந்து விருத்தாசலம் செல்லும் வாகனங்கள் நெய்வேலி ஆர்ச் கேட்டில் வலது பக்கமாக திரும்பி நெய்வேலி டவுன்ஷிப், மந்தாரக்குப்பம் வழியாக செல்ல வேண்டும்.
விருத்தாசலத்தில் இருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், ஆர்ச் கேட் வழியாக செல்ல வேண்டும்.
இத்தகவலை வடலுார் போலீசார் தெரிவித்துள்ளனர்.