sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

/

வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்

வடலுார் தைப்பூச விழா: சிறப்பு ரயில்கள் இயக்கம்


ADDED : பிப் 11, 2025 06:39 AM

Google News

ADDED : பிப் 11, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; தைப்பூச விழாவை முன்னிட்டு, வடலுார் வழியாக 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தென்னக ரயில்வே செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டம், வடலுாரில் தைப்பூச விழா, இன்று 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, இன்று முதல் 13ம் தேதி வரை, விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம், நெய்வேலி, வடலுார் வழியாக கடலுாருக்கு 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், 9:55 மணிக்கு விருத்தாசலம் வருகிறது.அங்கிருந்து 10:37க்கு வடலுாருக்கும், 11:15 மணிக்கு கடலுாருக்கும் சென்றடைகிறது.கடலுாரில் இருந்து பகல் 11:50 மணிக்கு புறப்படும் ரயில் 12:18 மணிக்கு வடலுார் வந்து, பகல் 1:00 மணிக்கு விருத்தாசலம் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் பகல் 2:05 மணிக்கு விருத்தாசலத்தில் புறப்படும் ரயில் மதியம் 2:37 மணிக்கு வடலுார் வருகிறது. 3:10க்கு கடலுார் சென்றடையும். மாலை 3:20க்கு கடலுாரில் புறப்படும் மற்றொரு ரயில், மாலை 5:40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us