/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்கால் கரை சாலை கந்தல்: 10 கிராம மக்கள் பாதிப்பு
/
வாய்க்கால் கரை சாலை கந்தல்: 10 கிராம மக்கள் பாதிப்பு
வாய்க்கால் கரை சாலை கந்தல்: 10 கிராம மக்கள் பாதிப்பு
வாய்க்கால் கரை சாலை கந்தல்: 10 கிராம மக்கள் பாதிப்பு
ADDED : செப் 05, 2025 03:21 AM

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே மானம்பாத்தான் வாய்க்கால் கரை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
புவனகிரியில் இருந்து வேளங்கிப்பட்டு கிராமம் வரை மானம்பாத்தான் வாய்க்கால் கரை சாலை உள்ளது.
இந்த சாலையில் பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில் இருந்து சேந்திரக்கிள்ளை வரை செல்லும் வாய்க்கால் கரை தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையை, தச்சக்காடு, வல்லம், சேந்திரக்கிள்ளை கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு தேவையான இடு பொருட்கள் எடுத்து செல்லவும், அறுவடை நேரங்களில் நெல் மூட்டைகளை டிராக்டர் மூலம் கொண்டு வரவும் பயன்படுத்துகின்றனர்.
மேலும், சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர் கிராம மக்கள் புவனகிரிக்கு குறுக்கு வழியாக செல்லவும், கீழமணக்குடி, ஆயிபுரம், குறியாமங்களம் கிராம மக்கள் பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, வேளங்கிப்பட்டு கிராமங்களுக்கு செல்லவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக உள்ளதால், 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே, மானம்பாத்தான் வாய்க்கால் கரை சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.