ADDED : நவ 27, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: நவ. 27-: சேத்தியாத்தோப்பில் வாய்மூடி சித்தர் குருபூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேத்தியாத்தோப்பு சந்தைத்தோப்பு வளாகத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி அடைந்த,
வாய்மூடி சித்தரின் குருபூஜையானது, கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரமன்று நடந்து வருகிறது. இதையொட்டி, வாய்மூடி சித்தருக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து ஆடை, மலர் மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்தனர்.
உணவு படையல் சிவனடியார்களுக்கு பரிமாறப்பட்டது.

