/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் அவதார தினம்: பக்தர்கள் தரிசனம்
/
வள்ளலார் அவதார தினம்: பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 06, 2025 01:49 AM
வடலுார்: வடலுாரில் வள்ளலாரின் அவதார தினதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
வடலுாரில் வள்ளலாரின், 203ம் ஆண்டு அவதார தினத்தையொட்டி தருமசாலையில் கடந்த 28ம் தேதி முதல், 30ம் தேதி வரை 3 நாட்கள் பாராயணம் நடந்தது. கடந்த, 1ம் தேதி முதல், 4ம் தேதி வரை, சத்திய ஞான சபையில் திரு அருட்பா முற்றோதல் நடந்தது.
நேற்று முன்தினம் சன்மார்க்க சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று தருமச்சாலையில் அகவல் பாராயணம், சன்மார்க்க கொடியேற்றுதல் நடந்தது.
தருமச்சாலையில் அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 2 அமைச்சர்கள் சன்மார்க்க கொடியேற்றினர். தொடர்ந்து, அணையா அடுப்பை பார்வையிட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உடனிருந்தனர்.
புவனகிரி வள்ளலார் பிறந்த மருதுாரில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் மலர் மற்றும் காணிக்கை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். புவனகிரி கடைவீதியில் உள்ள வள்ளலார் தயா இல்லத்தில் அகவல் பாராயணம் பாடி, சன்மார்க்க கொடி ஏற்றினர்.
ஜோதி வழிபாடு, சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை வள்ளலார் தயா இல்லத் தலைவர் டாக்டர் செந்தில்வேலன், செயலாளர் ரத்தினசுப்ரமணியர், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, துணை செயலாளர் செந்தில்குமார் செய்திருந்தனர்.