ADDED : அக் 07, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டியில் திருவள்ளுவர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வள்ளலார் 203ம் ஆண்டு அவதார தின விழா நடந்தது.
சங்க கவுரவ தலைவர் சஞ்சீவிராயர் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ராஜா வரவேற்றார். ஆட்சி மன்ற குழுத் தலைவர் ஆறுமுகம், ஆலோசகர் வீரப்பன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் சாமிப்பிள்ளை முன்னிலை வகித்தனர்.
நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு மண்டல தலை வர் சண்முகம், ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குரு, அற்புதவேல், ராஜா பேசினர்.
துணை செயலாளர் கோ தேகன் நன்றி கூறினார்.