/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் பலாவில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் பலாவில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் பலாவில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
வேளாண் அறிவியல் நிலையத்தில் பலாவில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
ADDED : செப் 24, 2025 06:03 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பலாவில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்புக் கூட்டுதல் பயிற்சி நடந்தது.
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடந்த பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்து, பலா சாகுபடி மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பேராசிரியர் கண்ணன், பலாவில் பலாக்கொட்டை மாவு, பலாப்பூ, பலா வற்றல், சிப்ஸ், பழக்கூழ், உலர்ந்த கொட்டை, பலா உப்புசக்கை, முறுக்கு, அல்வா, ஜாம் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கமளித்தார்.
காய்கறி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் லெனின், பலாவில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பேசினார்.
உளவியல் துறை உதவி பேராசிரியர் கலைச்செல்வி, சாகுபடி ரகங்கள், தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்தும், சுற்றுச்சூழல் அறிவியல் உதவி பேராசிரியர் சுகுமாரன் இயற்கை வேளாண்மை குறித்தும் பேசினார்.
மேலும், பலா மரங்களில் கவாத்து செய்தல், ஒட்டு கட்டும் முறைகள் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு, ஒட்டு கட்டும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து பணியாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.