தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த வேன் டிரைவர் பலி

 பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த வேன் டிரைவர் பலி

 பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த வேன் டிரைவர் பலி


ADDED : நவ 20, 2025 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 06:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே, பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து வேன் டிரைவர் உயிரிழந்தார்.

கடலுார் முதுநகர், சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சுப்பராயலு, 63; இவர் அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை 11:00 மணிக்கு பள்ளி வளாகத்திலுள்ள மரத்தின் கிளைகளை வெட்டுவதற்காக 'சி-பிளாக்' மாடியில் ஏறி கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us