/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்டவாளத்தில் கவிழ்ந்த வேன்: 9 பள்ளி மாணவர்கள் தப்பினர்
/
தண்டவாளத்தில் கவிழ்ந்த வேன்: 9 பள்ளி மாணவர்கள் தப்பினர்
தண்டவாளத்தில் கவிழ்ந்த வேன்: 9 பள்ளி மாணவர்கள் தப்பினர்
தண்டவாளத்தில் கவிழ்ந்த வேன்: 9 பள்ளி மாணவர்கள் தப்பினர்
ADDED : ஆக 25, 2025 11:59 PM

விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன், தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளியில் படிக்கும், கோ.பவழங்குடி கிராமத்தை சேர்ந்த 9 மாணவர்கள், தனியார் வேனில் நேற்று பள்ளிக்கு புறப்பட்டனர். விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தை சேர்ந்த சேகர், 41, வேனை ஓட்டினார்.
கோ.பவழங்குடியில் இருந்து திருச்சி - சென்னை ரயில்வே மார்க்கத்தில், கோ.பூவனுார் ரயில்வே கேட்டை காலை, 8:30 மணிக்கு வேன் கடக்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் இரும்பு தடுப்புகள் மீது மோதி, ரயில் பாதை குறுக்கே தலைக்குப்புற கவிழ்ந்தது.
மாணவர்களின் அலறல் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து, வேன் கண்ணாடிகளை உடைத்து, மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் லேசான காயங்களுடன் மாணவர்கள் தப்பினர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்ட விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பெற்றோர், உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில்வே, வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வேன் வேகமாக வந்ததால், வேகத்தடை மீது ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்தது தெரிய வந்தது. விருத்தாசலம் ரயில்வே போலீசார், வேன் டிரைவர் சேகரை கைது செய்தனர்.

