ADDED : செப் 12, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் கார், வேன் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.
சங்க மாநில தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கார், வேன் ஸ்டாண்டை சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வம் திறந்து வைத்தார்.
விழாவில், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் மதியழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயசீலன், நிர்வாகிகள் அப்துல் கலாம், சுதாகர், தினேஷ்குமார், வேல்முருகன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.
