/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு
/
வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு
வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு
வந்தே பாரத் ரயில் சேதம்; மாடு உரிமையாளர் மீது வழக்கு
ADDED : ஆக 13, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம், வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது.
மாலை, 5:25 மணிக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ரயில் சென்றபோது, தண்டவாளத்தின் குறுக்கே வந்த எருமை மாடு, மீது ரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.
மேலும் ரயிலின் முன்பக்கம் சேதமானது. இதனால், 14 நிமிடம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்டது.
விருத்தாசலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில் பயணியர் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவித்ததாக, மணலுாரைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் சிவகுமார் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.