/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.ஏ.ஓ., புகார் விவகாரம்: போலீசார் விசாரணை
/
வி.ஏ.ஓ., புகார் விவகாரம்: போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 21, 2025 05:08 AM
கடலுார் : வி.ஏ.ஓ., புகார் கொடுத்த நபர் சம்பவத்தின் போது இருந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த பரமேஸ்வரநல்லுாரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், கடந்த 11ம் தேதி அரசுக்கு சொந்தமான கால்வாயில் இருந்து அனுமதி பெறாமல் வீடு கட்டுமான பணிக்கு தண்ணீரை பணத்திற்கு விற்பனை செய்ததாக வி.ஏ.ஓ., வெற்றிவேலுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவர் சம்பவ இடத்திற்கு சென்று தட்டிக் கேட்ட போது, ரவிச்சந்திரன், 3 பேருடன் சேர்ந்து வி.ஏ.ஓ., வெற்றிவேலை தாக்கினார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ரவிச்சந்திரன், இவரது மகன் அறிவரசன், ராஜேஷ் உட்பட 4 பேர் மீது சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் அறிவரசன், முகநுால் பக்கத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ததாகவும், சம்பவம் நடந்த தேதியில் ைஹதராபாத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.