தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுாரில் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

 கடலுாரில் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்

 கடலுாரில் வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 31, 2025 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2025 03:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக மாற்றி அமைக்க வேண்டும்; தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் துரைராஜ் முன்னிலை வகித்தனர் . மாநில துணை தலைவர் ஜான்போஸ்கோ, இணை ஒருங்கிணைப்பாளர் ரவி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us