ADDED : டிச 29, 2024 06:12 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவிலில் த.மா.கா., சார்பில், கட்சி தலைவர் வாசன் பிறந்த நாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஜோதி பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன், முன்னால் எம்.எல்.ஏ., புரட்சிமணி ஆகியோர் பங்கேற்று, கட்சி கொடி ஏற்றி ஏழை மக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினர்.
திருச்சின்னபுரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனை மற்றும் வீரநல்லுாரில் நிகழ்ச்சிகள் நடந்தது.
நிர்வாகிகள் மாவட்ட துணைத்தலைவர் குணசேகர், மகளிரணி தலைவி ஜான்சிராணி, துரைசாமி, ரத்தினவேல், மகேந்திரன், ராமச்சந்திரன், குமார், சம்பந்தம், பொன்ஒளி வாசன், கண்ணதாசன், ரமேஷ்குமார், செல்வராஜ், தர்மா மற்றும் பலர் பங்கேற்றனர்.

