தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி.,வேட்பாளர் மாற்றம்: பா.ம.க.,வினர் குஷி  

 வி.சி.,வேட்பாளர் மாற்றம்: பா.ம.க.,வினர் குஷி  

 வி.சி.,வேட்பாளர் மாற்றம்: பா.ம.க.,வினர் குஷி  


ADDED : ஏப் 05, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன் போட்டியிடுவதை வாபஸ் பெற்று, காங்., கட்சிக்காரர் ஜோதிமணியை திடீரென அறிவித்துள்ளதால் பா.ம.க.,வினர் குஷி அடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,விற்கும், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டது. அதில், பா.ம.க.,வில் மருத்துவரணி மாநில செயலாளர் அன்பு சோழன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வி.சி.க.,வில் நீண்ட இழுபறிக்கு பின், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னையே வேட்பாளராக அறிவித்தார்.

திருமாவளவன் வேட்பாளராக அறிவிப்பிற்கு முன்னர் தொகுதியில் வி.சி.க.,வில் யார் போட்டியிட்டாலும், த.வெ.க., வேட்பாளர் வி.சி., மற்றும் தி.மு.க., ஓட்டுக்களை பிரிக்கும் நிலையில் அ.தி.மு.க., கூட்டணி பா.ம.க., வேட்பாளர் வெற்றிப் பெறுவார் என்ற நிலை இருந்தது.

திருமாவளவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், கள நிலவரம் முற்றிலும் மாறியது. அ.தி.மு.க., த.வெ.க., உள்ளிட்ட ஓட்டுகள் ஜாதிய ரீதியாக திருமாவளவனுக்கு மாறும் நிலை ஏற்பட்டது. இதனால் திருமாவளவன் எளிதாக வெற்றிப் பெறுவார் என்ற நிலையால் பா.ம.க.,வினர் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் திருமாவளன் நேற்று முன்தினம் திடீரென தான் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்ததோடு, காங்., பிரமுகர் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார். திருமாவளவன் அறிவிப்பால் உள்ளூர் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அதேநேரத்தில் கலக்கத்தில் இருந்த பா.ம.க.,வினர், திருமாவளவன் வாபஸ் பெற்றதால், குஷியில் அ.தி.மு.க.,வினருடன் ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us