/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருச்சியில் வி.சி., மாநாடு; கடலூரில் கடைகள் அடைப்பு
/
திருச்சியில் வி.சி., மாநாடு; கடலூரில் கடைகள் அடைப்பு
திருச்சியில் வி.சி., மாநாடு; கடலூரில் கடைகள் அடைப்பு
திருச்சியில் வி.சி., மாநாடு; கடலூரில் கடைகள் அடைப்பு
ADDED : ஜன 27, 2024 06:42 AM

கடலுார் : வி.சி., கட்சி மாநாடு காரணமாக கடலுாரில் வணிக நிறுவனங்கள் முன்னெச்சரிக்கையாக இரவு 7:30 மணிக்கு மூடப்பட்டது.
திருச்சியில் வி.சி., கட்சி சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' தலைப்பில் மாநாடு நேற்று நடந்தது. மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாடு முடிந்து இரவு தொண்டர்கள் தங்கள் பகுதிகளுக்கு புறப்பட்டனர்.
கடலுார் முதுநகர், லாரன்ஸ்ரோடு, பாரதி சாலை, நேதாஜி சாலை, செம்மண்டலம் மற்றும் சுற்றியுள்ள பிரதான சாலைகளில் வழக்கமாக இரவு 9:00 மணிக்கு வணிக நிறுவனங்கள் மூடப்படும்.
ஆனால், வி.சி., கட்சி மாநாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாநகரில் கடைகளை முன்கூட்டியே மூடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்பேரில், 7:30 மணி முதலே வியாபாரிகள் கடைகளை மூடினர்.