/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கொடிக்கம்பம் சேதம்: 10 பேர் மீது வழக்கு
/
வி.சி., கொடிக்கம்பம் சேதம்: 10 பேர் மீது வழக்கு
ADDED : நவ 06, 2024 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரி அடுத்த மஞ்சகொல்லை பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட வி.சி., கொடிக்கம்பம், கல்வெட்டை சேதப்படுத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை பஸ் நிறுத்தத்தில், வி.சி., கட்சி கொடிகம்பத்தில் அமைக்கப்பட்ட கட்சிக் கொடி மற்றும் கம்பம் சமீபத்தில் காணாமல் போனது.
இதுகுறித்த புகாரின் பேரில், பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது, மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.