/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., கொடிக்கம்பம் மாயம் மறியலில் ஈடுபட முயற்சி
/
வி.சி., கொடிக்கம்பம் மாயம் மறியலில் ஈடுபட முயற்சி
ADDED : அக் 21, 2024 06:40 AM

புவனகிரி: புவனகிரி அருகே வி.சி., கொடிக்கம்பத்தை, அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அக்கட்சியினர் சாலை மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் வி.சி.கட்சியினர், கல்வெட்டுடன் கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்றி இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, கம்பத்தில் இருந்த கட்சிக் கொடி காணாமல் போனது.
இது குறித்து மருதுார் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இவற்றை கண்டித்து 14 ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் சமரசம் செய்த மருதுார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.
இதில், மேல் நடவடிக்கை இல்லாததால் சேத்தியாத்தோப்பு-புவனகிரி சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட, முகாம் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் வி.சி.,கட்சியினர் திரண்டனர். தகவலறிந்த மருதுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி இரு தினங்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதையடுத்து வி.சி., கட்சியின் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் நேற்று காலை 11:30 மணியில் இருந்து 11:50 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது.