/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சம்கொல்லை அரசு பள்ளியில் பறந்த வி.சி., கட்சி கொடி
/
கஞ்சம்கொல்லை அரசு பள்ளியில் பறந்த வி.சி., கட்சி கொடி
கஞ்சம்கொல்லை அரசு பள்ளியில் பறந்த வி.சி., கட்சி கொடி
கஞ்சம்கொல்லை அரசு பள்ளியில் பறந்த வி.சி., கட்சி கொடி
ADDED : நவ 11, 2025 06:25 AM

காட்டுமன்னார்கோவில்: கஞ்சம் கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி இரும்பு கம்பத்தில் வி.சி.கட்சி கொடி கட்டியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்டுமன்னார்கோயில் அடுத்த கஞ்சம் கொல்லை அரசு மேல்நி லைப் பள்ளி கட்டடத்தின் மீது இணையதள வசதிக்காக அமைக்கப்பட்ட 30 அடி உயர இரும்பு கம்பத்தில், மர்ம நபர்கள் வி.சி.கட்சி கொடியை கட்டி வைத்தனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி இயங்கியது.
பள்ளி இடைவேளை நேரத்தில் இணையதள கம்பத்தில் வி.சி.கட்சி கொடி பறப்பது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனடியாக கட்சி கொடி அகற்றப்பட்டது.
இத்தகவல் கிராமத்தில் பரவியதால் கிராம மக்கள் பள்ளியில் குவிய துவங்கினர். தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தினர். கடந்த சில ஆண்டிற்கு முன்பு இப் பள்ளியின் கம்பத்தில் பா.ம.க., கொடி கட்டப்பட்டு பின்பு அகற்றப்பட்டது. பள்ளியில் கட்சி கொடி கட்டும் சம்பவங்களை தடுக்க பள்ளி வளாகத்தில் சி.சி.டி.வி., பொருத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

