ADDED : நவ 11, 2025 06:25 AM

கடலுார்: சிதம்பரம் தில்லை கம்பன் கழக ஆண்டு விழா, சிதம்பரம் மேலரத வீதி, பெல்காம் அனந்தம்மாள் அறக்கட்டளை நிலையத்தில் நடந்தது.
தில்லை கம்பன் கழக தலைவர் சிதம்பரம் செந்தில் ஞானவேல் சிட்பண்ட் உரிமையாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ராமநாதன், முருகன் நகைக்கடை உரிமையாளர் முத்துக்குமரன், ஜெயம் பாத்திர மாளிகை சிவராமவீரப்பன், சரசு பள்ளி தாளாளர் கவிதா முருகன் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் கல்யாணராமன் வரவேற்றார். ஆலோசகர்கள் ராகவன், பொன்னம்பலம், அருள்பிரகாசம் வாழ்த்தி பேசினர். செயலாளர் வேலாயுதம் ஆண்டறிக்கை வாசித்தார்.
நடராஜன், 'கண்ணன் கலிவிருத்தம்' நுாலை வெளியிட்டார். அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் பாரி சிறப்புரையாற்றினார்.
டி.வி., இயக்குனர் சிவநந்தினி, 'கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்ப்போம்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். புரவலர்கள் ராமசாமி, வீரமணி, கலாவதி குணசுந்தரி, கவிதா முருகன், கயல்விழி ஆகியோருக்கு புரவலர் பட்டயம் வழங்கப்பட்டன.
விழா ஏற்பாடுகளை பிரகாஷ், மணிராஜா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை கீர்த்தனா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் ஆசிரியர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

