ADDED : செப் 21, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: பெரியகங்ணாங்குப்பத்தில் வி.சி., கட்சியினர் வீட்டுமனை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
கடலுார் ஊராட்சி ஒன்றியம், பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி வி.சி., கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று வி.சி., கட்சி ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, ஒன்றிய பொருளாளர் சம்பத், முகாம் செயலாளர் தேவராசு, மாநில நிர்வாகி செவ்வேந்தன், துணை செயலாளர் பிரேமன், ரீகன், வினோத் உட்பட பலர் பெரியகங்கணாங்குப்பத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
ரெட்டிச்சாவடி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் கலைந்துச் சென்றனர்.