/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கண்களில் கருப்பு துணி கட்டி வி.சி., கட்சியினர் போராட்டம்
/
கண்களில் கருப்பு துணி கட்டி வி.சி., கட்சியினர் போராட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி வி.சி., கட்சியினர் போராட்டம்
கண்களில் கருப்பு துணி கட்டி வி.சி., கட்சியினர் போராட்டம்
ADDED : ஜன 29, 2025 11:20 PM

கடலுார்: வேங்கைவயல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, கடலுாரில் வி.சி., கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில் தலைமை தாங்கினார்.
நகர அமைப்பாளர் கிட்டு, நகர செயலாளர் செங்கதிர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் தாமரைச்செல்வன், அமைப்பு செயலாளர் திருமார்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கண்டன உரையாற்றினர்.
இதில், வேங்கை வயல் வழக்கை உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிடக்கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின், இக்கோரிக்கை மனுவை தமிழக முதல்வருக்கு தபால் மூலம் அனுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் துரை, ஆறுமுகம், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.