ADDED : ஆக 03, 2025 03:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலுார் நான்குமுனை சந்திப்பில் மைய மாவட்ட வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் ஆணவ படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார்.
முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் ராஜ்குமார், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி, நகர செயலாளர்கள் தங்க ஜோதிமணி, பாலமுருகன், முன்னாள் நகர அமைப்பாளர் வரதராஜன், ஹரி, அரவிந்த், தமிழ்ச்செல்வன், விஜய், ஒன்றிய துணை செயலாளர் துளசி மணி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.