/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு
/
வீராணம் ஏரி தண்ணீர் பாசனத்திற்கு திறப்பு
ADDED : ஜன 24, 2025 11:06 PM

சேத்தியாத்தோப்பு: வீராணம் ஏரி பூதங்குடி வி.என்.எஸ்., மதகில் இருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட்டுள்ளது.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் துவங்கும் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை வரையில் 14 கி.மீ., நீளமுடையது. ஏரியின் முழுகொள்ளவு 48.50 அடி (1465 மில்லியன் கன அடி, தண்ணீர் தேக்க முடியும்.
வீராணம் ஏரியில் இருந்து சம்பா பருவ காலங்களில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி, புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை வரை டெல்டா கடைமடை பகுதி பாசனம் பெறுகிறது.
தற்போது ஏரியில் 46.50 அடி(1235 மில்லின் கன அடி) தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் கீழணையிலிருந்து வடவாறு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடவு செய்துள்ள நெல்வயல்கள் காய்ந்து வரும் நிலையில், வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, வீராணம் ஏரி பூதங்குடி வி.என்.எஸ்., மதகில் 400 கனஅடி லால்பேட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவராஜ் தலைமையில் பணியாளர்கள் தண்ணீர் திறந்து வெள்ளாற்றிற்கு அனுப்பி வருகின்றனர்.
வீராணம் ஏரியிலிருந்து வரும் தண்ணீரை சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கி பொதுப்பணித்துறை பாசனப்பிரிவு உதவி பொறியாளர் படைகாத்தான் தலைமையில் பணியாளர்கள் செந்தில், கமலக்கண்ணன், ரமேஷ், மூர்த்தி, லட்சுமணன் ஆகியோர் ஏ.டி.சி., மதகை திறந்து வெள்ளாறு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அனுப்பி அங்கிருந்து மானம்பார்த்தான், அரியகோஷ்டி, பழைய முரட்டு வாய்க்கால் வழியாக திறந்து பாசனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

