தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடும் பனிப்பொழிவு ஊர்ந்து சென்ற வாகனங்கள்

 கடும் பனிப்பொழிவு ஊர்ந்து சென்ற வாகனங்கள்

 கடும் பனிப்பொழிவு ஊர்ந்து சென்ற வாகனங்கள்


ADDED : பிப் 09, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு ஊர்ந்து சென்றன.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் பனிப்பொழிவு துவங்கியது. ஆனால், நேற்று அதிகாலையில் முதல் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழி இருந்ததால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

சேத்தியாத்தோப்பு சேத்தியாத்தோப்பு சுற்றுவட் டார பகுதிகளில் நேற்று காலை 9:00 மணிவரை கடும் பனிப்பொழிவு இருந்தது. சென்னை - கும்பகோணம் சாலை, விருத்தாசலம் - ப ரங்கிப்பேட்டை சாலை, சேத்தியாத்தோப்பு - காட்டுமன்னார்கோவில் சாலை, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி சாலைகளில் பனிப்பொழிவு அதிக அளவில் இருந்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us